தலைமைச் செயலகம் முற்றுகை!
10 சதவிகித இட ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இன்று (நவம்பர் 18) புதுச்சேரி தலைமை செயலகத்தை முற்றுகையிடுகின்றன.
வ.உ.சி நினைவு தினம்!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
விக்ரம் ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதல் முறையாக தனியார் நிறுவனத்தின் விக்ரம் ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது.
கலக தலைவன் ரிலீஸ்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் திரைப்படம் இன்று வெளியாகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து மோதல்!
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.
கனக்ட் டீசர் வெளியீடு!
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கனக்ட் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் 578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சைபர் கிரைம் காவல் நிலையம்!
புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக சைபர் கிரைம் காவல் நிலையத்தை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைக்கின்றார்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 181-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசுப் பணி இடஒதுக்கீடு: புதுச்சேரியில் பாமகவினர் போராட்டம்!
மேற்குவங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்!