டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு, அமலாக்கத் துறை காவல் கேட்ட மனு மீது இன்று (ஜூன் 16) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

திமுக கூட்டணி பொதுக்கூட்டம்!

செந்தில் பாலாஜி கைதை கண்டித்தும் , பாஜகவை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகள் கோவையில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்துகின்றன

ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

ஓடிடி ரிலீஸ்!

திரையரங்குகளில் வெளியான தமிழரசன், பர்ஹான ஆகிய திரைப்படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகிறது.

வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

391ஆவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

மாமன்னன் ட்ரெய்லர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் பட ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி!
ஆஸ்திரேலியா- இங்கிலாந்தும் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சி, கோவை, திருப்பூர், கடலூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேட்டூர் அணையில் ஆய்வு நடத்திய மத்திய படையினர்: காரணம் என்ன?

மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசின் புதிய திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share