டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

திருவாரூர் செல்லும் முதல்வர்!

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 18) இரவு திருவாரூருக்கு செல்கிறார்.

மனதின் குரல் நிகழ்ச்சி!

இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஜூன் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது

ஜல்லிக்கட்டு – பாராட்டு விழா!

புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 18) ஜல்லிக்கட்டு பாராட்டு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

உலக கோப்பை தொடக்க போட்டி!

இன்று நடைபெறும் உலககோப்பை தொடக்க ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நேபாளம், வெஸ்ட் இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

வானிலை அப்டேட்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் பறக்க  தடை !

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு  இன்று முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையில் டிரோன்கள் பறக்க காவல் துறை தடைவிதித்துள்ளது.

ஜேஇஇ முடிவு!

jeeadv.ac.in இணைய தளத்தில்  ஜேஇஇ முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

பெட்ரோல் டீசல்  விலை!

சென்னையில் இன்று 393-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு!

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மண்டல அளவிளான ஆயத்த மாநாடு இன்று தர்மபுரியில் நடைபெறுகிறது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் விழா!

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா இன்று (ஜூன் 18) தொடங்குகிறது.

கிச்சன் கீர்த்தனா: எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்?

சாதித்த மாணவர்களிடம் அன்பு பரிசு கேட்ட நடிகர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel