முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை செய்கிறார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி
அமலாக்கத் துறை விசாரணையை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு!
கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஜி 20 மாநாடு!
மாமல்லபுரத்தில் இன்று முதல் 16ஆம் வரை மூன்று நாட்கள் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.
மறுகூட்டல் முடிவு!
பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
கால்பந்து போட்டி!
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் நடைபெறும் சீனியர் டிவிசன் லீக் போட்டியில் இன்று ஏ.ஜி.அலுவலகம்-சுங்க இலாகா அணிகள் மோதுகின்றன.
கடலுக்குள் செல்லும் மீனவர்கள்!
இன்றுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடையும் நிலையில் கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 389-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை அப்டேட்!
இன்று முதல் ஜூன் 17 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
’வண்ணார பேட்டையில’ பாடல்!
சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடிய ‘வண்ணார பேட்டையில’ என்ற பாடல் இன்று காலை வெளியாகிறது.
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
Published On:
| By Kavi

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel