டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

70,000 பேருக்கு பணி நியமன ஆணை!

அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 70,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று (ஜூன் 13) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

அதிமுக மா. செ.க்கள் கூட்டம்!

சென்னையில் இன்று  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அமித் ஷா ஆலோசனை!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புகைப்பட கண்காட்சி!

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் புகைப்பட கண்காட்சி இன்று கள்ளக்குறிச்சியில் தொடங்குகிறது.

உலகக் கோப்பை ஸ்குவாஷ்

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்குடன் இன்று மோதுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 388வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை!

ராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை ஒட்டி, இன்று அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை அப்டேட்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 – 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கால்பந்து போட்டி!

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் நடைபெறும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில் இன்று வருமான வரி-கலால் வரி அணிகள் மோதுகின்றன.

நெட் தேர்வு!

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் மில்க் ஷேக்!

“பார்களை மூடியதால் வருவாய் இழப்பு” – தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share