டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி

தெலங்கானாவில் இன்று (ஜூலை 2) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

குமரி சங்கமம் நிகழ்ச்சியில் அண்ணாமலை

நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று நடைபெறும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.

திருவண்ணாமலை கிரிவலம்!

திருவண்ணாமலை  ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு தொடங்குகிறது.

நெல்லையப்பர் கோயில் விழா!

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனித் தேரோட்ட.ம் இன்று நடை பெறுகிறது.

மாவீரன்  டிரெய்லர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர்  இன்று வெளியாகிறது.

மழை அப்டேட்!

நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னை மேடவாக்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்!

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி அணிகள் இன்று மோதுகின்றன.

பிரியாணி தினம்!

இன்று சர்வதேச பிரியாணி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சாப்பாட்டு பிரியர்கள் உணவு டெலிவரி ஆப்களில் ஆர்டர்களை குவித்து வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் 407வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: எல்லோரும் குடிக்கலாமா… ஏ.பி.சி. ஜூஸை?

”செந்தில்பாலாஜியால் கரூருக்கு தலைகுனிவு”: அண்ணாமலை

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts