டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!
ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து மண்டல போக்குவரத்துக் கழகமும் இன்று (ஜூலை 25) வேலைநிறுத்தம். ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் அறிவிப்பு.
திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு!
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு இன்று பதவி ஏற்கிறார். கடந்த 18ஆம் தேதி நடந்த தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மின்கட்டணம் – அதிமுக போராட்டம்!
மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக இன்று சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் போராட்டம் இதுவாகும். சென்னையில் மட்டும் வரும் 27ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

கொரோனா பரவல் அப்டேட்!
தமிழகத்தில் ஜூலை 23ஆம் தேதி 2,104 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,945ஆக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 419 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியளவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் தொடர்ந்து 65ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை.

ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
இந்தியா – மேற்கிந்திய அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (ஜூலை 24) நடந்தது. இதில் , இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு மிதிவண்டி!
இன்று பிளஸ் 1 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தைச் சென்னை நுங்கம்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கை அதிபர் அலுவலகம் இன்று திறப்பு!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்தது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றதைத் தொடர்ந்து ராணுவத்தினர் அதிபர் மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றினர். எனவே இன்று முதல் மீண்டும் அதிபர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வருகிறது.
கனமழைக்கு வாய்ப்பு!
வரும் 26, 27-ம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவும் குரங்கு அம்மை!
கேரளாவில் 3 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை உறுதி. ஹைதராபாத் மருத்துவமனையில் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று மத்திய அரசு குரங்கு அம்மையைத் தடுப்பது தொடர்பாக உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *