இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 22) டெல்லி செல்கிறார்.
தொடர்ந்து 3வது நாளாக சோதனை!
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் தொடர்ந்து 3ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை. இதில், ரூ. 75 கோடி ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்.
திரௌபதி முர்மு வெற்றி!
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் போட்டியிட்ட அவர் 6,76,803 வாக்குகள் மதிப்பிலான 2161 வாக்குகள் பெற்றார். வரும் 25ம்தேதி குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவி ஏற்க உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 62ஆவது நாளாக மாற்றமின்றி 1 லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 516 பேருக்கு உட்பட மொத்தம் 2093 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 34,662 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குடியரசு துணை தலைவர் தேர்தல் – மம்தா பானர்ஜி அதிரடி முடிவு!
குடியரசு துணை தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்க்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மம்தா பானர்ஜியிடம் முறைப்படி ஆலோசிக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
டெல்லியில், 2021ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்!
நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்க சென்றிருந்தார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வெளியீடு!
சென்னையில் வரும் 28ம் தேதி துவங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடலை செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி!
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு போர்ட்ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.