டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க….

Published On:

| By christopher

மின் கட்டணம் உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!

மின் துறையில் கடன் உயர்ந்துள்ள காரணத்தாலும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு வலியுறுத்தியதாலும் தமிழகத்தில் மின்கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்!

இன்று முதல் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தனியார் பள்ளி சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் நேற்று தெரிவித்தார். கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக நேற்று சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசின் அனுமதியின்றி தனிச்சையாக விடுமுறை அறிவித்தது பற்றி பதிலளிக்க உத்தரவு.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

நாடு முழுவதும் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களித்த இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 59வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை.

கள்ளக்குறிச்சி கலவரம் – 278 பேர் கைது!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ”கலவர வழக்கில் கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது” என்று அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

ஸ்ரீமதி உடல் மறுபரிசோதனைக்கு உத்தரவு!

மாணவி தந்தையின் மனுவை ஏற்று, ஸ்ரீமதியின் உடலை 3 மருத்துவர்கள் குழு முன்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு!

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் பதவியேற்றுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெக்தீப் தங்கர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி!

கேரளாவில் 2வது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. துபாயிலிருந்து கடந்த 13ம் தேதி கண்ணூர் திரும்பிய நிலையில் இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார்.

சிவாஜி குடும்ப சொத்து விவகாரம் – இன்று விசாரணை!

சொத்து விவகாரத்தில் தங்கள் சகோதரர்கள் ஏமாற்றிவிட்டதாக மறைந்த நடிகர் சிவாஜியின் மகள்கள் தொடுத்துள்ள உரிமையியல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதுவரை 104 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ள இவர் 3 சதங்களுடன் 2919 ரன்கள் அடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share