டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

பாஜக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக ஜெகதீப் தங்கார் போட்டியிடுவதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தங்கார், தற்போது மேற்குவங்க ஆளுநராக உள்ளார்.

இன்று நீட் தேர்வு!

நாடு முழுவதும் இன்று (ஜூலை 17) இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

பள்ளி மாணவி மர்ம மரணம் – பொதுமக்கள் போராட்டம்!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து பள்ளிக்கு சீல் வைக்கவும், பள்ளியின் தாளாளரை கைது செய்யவும் வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நீண்ட நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்களை போலீசார் கலைத்தனர்.

செஸ் போர்டாக மாறிய நேப்பியர் பாலம்!

மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலம் செஸ் போர்ட் போன்று வண்ணங்கள் தீட்டப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 57வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 64 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

வரலாற்றில் 42வது முறையாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 120க்கு மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

ஓபிஎஸ் நீக்கம் – இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக நோட்டீஸ்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோழர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பதாக புகார். சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *