டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

கோவில் திருப்பணி!

அறநிலையத் துறை சார்பில் 1,250 கிராமப்புற கோயில்களின் திருப்பணிக்கு ரூ.50 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 5) வழங்குகிறார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு!

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நூல் வெளியீட்டு விழா!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் பிராமணாள் பெயர் அழிப்பு சாதி ஒழிப்பு போராட்டம் வரலாற்று ஆவண நூல் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறுகிறது.

பாஜக ஆர்ப்பாட்டம்!

பொங்கல் தொகுப்பில் தேங்காயைச் சேர்க்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நீர்வளத்துறை மாநாடு!

தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று துவங்குகிறது.

ஆர்.என்.ரவி வழக்கு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 231-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செவிலியர்கள் போராட்டம்!

கொரோனா காலத்தில் வேலை செய்த ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கோரி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தியா, இலங்கை மோதல்!

இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

5 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிப்பு!

திரைதுறையினருக்கு அமைச்சர் அளித்த உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.