பட்ஜெட் கூட்டத்தொடர்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசு தலைவர் உரையை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
பேனா நினைவுச் சின்னம் கருத்து கேட்பு கூட்டம்!
முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக சென்னை மெரினாவில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது. திருவல்லிக்கேணி சின்ன கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.
ஜி 20 கருத்தரங்கு!
ஜி 20 அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாட்கள் கருத்தரங்கு சென்னையில் இன்று தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இன்றே கடைசி தேதி!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.
இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆலோசனை!
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளது.
சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை!
ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணைய நிறுவன நாள்!
தேசிய மகளிர் ஆணையத்தின் 31 வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வலிமையான பெண்கள் வலிமையான பாரதம் என்ற பொருளில் உரையாற்ற உள்ளார்.
அண்ணாமலை ஆலோசனைக் கூட்டம்!
சென்னை கமலாலயத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பார்க்க அனுமதி
‘அம்ரித் உத்யன்’ என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டத்தை பார்வையிட இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பிபிசி ஆவணப்படம்: பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – டி.ஆர். பாலு
வார்த்தைக்கு வார்த்தை ஆபாச பேச்சு: திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!