இந்திய அறிவியல் மாநாடு!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று(ஜனவரி 3) இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
ஜிம்னாஸ்டிக் செயற்கையிழை ஓடுதளம்!
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஸ்டிக் செயற்கையிழை ஓடுதளத்தை, தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
பொங்கல் சிறப்பு பேருந்து!
பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
வீதி விருது விழா!
சென்னை லயோலா கல்லூரியில் இன்று நடைபெறும் வீதி விருதுவிழா நிகழ்ச்சியில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.
கட்டபொம்மன் நினைவு தினம்!
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இந்தியா, இலங்கை மோதல்!
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
பொங்கல் டோக்கன் விநியோகம்!
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் 8ஆம் தேதி வரை வீடுவீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 229-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒருலிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தனித்தேர்வர்கள் விண்ணப்பம்!
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவுசெய்ய இன்று கடைசி நாள் ஆகும்.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 12பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 89பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொங்கல் விடுமுறைக்கு எத்தனை சிறப்பு பஸ்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை!
”போலீசுக்கே இந்த நிலையா”?: டிடிவி தினகரன்