புத்தாண்டு பண்டிகை!
உலகம் முழுவதும் 2023-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (ஜனவரி 1) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இலவச உணவு தானிய திட்டம்!
கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம், நாடு முழுவதும் இன்று முதல் மீண்டும் வழங்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி!
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மோகினி அலங்காரத்தில் இன்று நம்பெருமாள் காட்சியளிக்கிறார்.
டாடா படத்தின் புதிய அறிவிப்பு!
கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடிக்கும் டாடா படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
ரேஷன் கடை புதிய அமல்!
ரேஷன் கடைகளில் இன்று முதல் மத்திய, மாநில அரசுகளின் பொருட்களுக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது.
வானிலை நிலவரம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி கூட்டம்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது குறித்து இன்று பிசிசிஐ ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
திருப்பதி தரிசன டோக்கன்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் பிரவேச இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 225-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.