டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பொங்கல் கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் மக்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு கோலாகலமாக தை திருநாளை வரைவேற்றனர்.

8ஆவது வந்தே பாரத் ரயில்!

பிரதமர் மோடி இன்று நாட்டின் 8ஆவது வந்தே பாரத் ரயிலை தெலுங்கானா ஆந்திர மாநிலங்களை இணைக்கும் வகையில் தொடங்கி வைக்கிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கவுள்ளது.

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்!

திமுகவினர் தங்களது இல்லத்தின் முன்பு ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு பொங்கலை வரவேற்றனர்.

பெட்ரோல் டீசல் விலை!

239-வது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

கிரிக்கெட் அப்டேட்!

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

டாஸ்மாக் மூடல்!

ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது.

உலக கோப்பை ஹாக்கி!

உலகக் கோப்பை ஹாக்கியில் 2-வது வெற்றியை குறி வைத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

கொரோனா பரவல்!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, குமரி, திருச்சி, கோவை ஆகிய பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓடிடியில் லேபர்!

13 சர்வதேச விருதுகளை வென்ற ‘லேபர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக இன்று மூவி வுட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

முடிவுக்கு வரும் டென்னிஸ் வாழ்க்கை : சானியா மிர்சா கண்ணீர்

ஆளுநருக்கு மிரட்டல் : திமுக பேச்சாளர் அதிரடி நீக்கம்

கிச்சன் கீர்த்தனா: பஃபே பிரியரா நீங்கள்… இதோ உங்களுக்கான டிப்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.