ராணுவ விமான தயாரிப்பு ஆலை!
குஜராத் மாநிலத்தில் ராணுவ விமான தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்டோபர் 30) அடிக்கல் நாட்டுகிறார்.
தேவர் குருபூஜை!
முத்துராமலிங்கத் தேவர் 115-வது தேவர் குருபூஜை இன்று பசும்பொன்னில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
அன்புமணி நடைபயணம்!
சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று இரண்டாவது நாளாக கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் செய்ய உள்ளார்.
சூரசம்ஹாரம் விழா!
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 162-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மனதின் குரல் நிகழ்ச்சி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11மணிக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகிறார்.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.
உலக கோப்பை போட்டி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. மற்ற இரு போட்டிகளில் வங்க தேசம், ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை கே.கே.நகர், ராஜமன்னார் சாலையின் உயரத்தை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் நவம்பர் 1ஆம் தேதி ராஜமன்னார் சாலை செல்லும் வாகனங்கள் பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில்162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி தமிழகத்தில் 1,898பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சரவை ஒப்புதல்!
திருட்டு வாகனம்: பெயர் மாற்றம் செய்த ஆர்டிஓ ஆபீஸ்!