டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

அம்பேத்கர் மணிமண்டபம்!

இன்று (அக்டோபர் 27) காலை 10 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பாஜக ஆர்ப்பாட்டம்!

தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 44-வது நாள் தெலங்கானா மாநிலம் மக்தால் பகுதியில் துவங்கி நாராயண்பட் பகுதியில் நிறைவு செய்கிறார்.

மருது சகோதரர்கள் நினைவு தினம்!

சுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்கள் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

உலக கோப்பை போட்டி!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகள் மற்றும் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளும் மோதுகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது சகோதரர்கள் 122-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 159-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கள ஆய்வு!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடியில் திறந்த நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் இன்று காலை 11 மணியளவில் கள ஆய்வு செய்கிறது.

வானிலை நிலவரம்!

வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

யசோதா டிரைலர் வெளியீடு!

இயக்குனர்கள் ஹரி சங்கர், ஹணீஷ் நாராயண் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

”இப்போது தான் நான் நிம்மதியாக உணர்கிறேன்” – சோனியா காந்தி

கோவை கார் விபத்து: குற்றவாளிகளுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share