டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு!

கர்நாடகாவில் இன்று(நவம்பர் 2) நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக பேசுகிறார்.

ஸ்டாலின் – மம்தா சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை அவரது முகாம் அலுவலகத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி சந்தித்து பேச உள்ளார்.

ராஜராஜ சோழன் சதய விழா!

ராஜராஜ சோழன் 1037-ஆம் ஆண்டு சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று நடைபெறுகிறது.

உலக கோப்பை போட்டி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, வங்க தேசம் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

கனமழை விடுமுறை!

கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

துக்க தினம் அனுசரிப்பு!

மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்து 142பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு இன்று குஜராத் மாநிலத்தில் துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது.

மத்திய குற்றப்பிரிவு சம்மன்!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு இல்லை என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி‌.நிர்மல் குமார் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அவதார் ட்ரைலர்!

அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது.

சவுக்கு சங்கர் வழக்கு!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 165-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திகட்ட திகட்ட பாடலில் நா.முத்துக்குமாரின் திகட்டாத வரிகள்!

ராமஜெயம் கொலை வழக்கு: நிர்மலா சீதாராமன் தலையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel