டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

Published On:

| By Selvam

மனுஸ்மிருதி புத்தகம்!

இன்று (நவம்பர் 6) காலை 10 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், பொதுமக்களிடம் மனுஸ்மிருதி புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்குகிறார்.

அதிமுக பொதுக்கூட்டம்!

இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

வாக்கு எண்ணிக்கை!

தெலங்கானா, பீகார், உத்தரப்பிரதேசம்,அரியானா, உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

டி20 உலக கோப்பை போட்டி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

ராகுல் காந்தி நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 52-வது நாளை தெலங்கானா மாநிலம் அல்லதுர்க் பகுதியில் துவங்கி ஜுக்கல் பகுதியில் நிறைவு செய்கிறார்.

வானிலை நிலவரம்!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும்.

நாடார் மகாஜன சங்க தேர்தல்!

மதுரையில் இன்று நாடார் மகாஜன சங்க தேர்தல் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 169-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைப்பு!

தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 1,139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி: மணிஷ் சிசோடியா உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share