டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

திமுக பொதுக்குழு கூட்டம்!

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (அக்டோபர் 9) சென்னையில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மிலாது நபி கொண்டாட்டம்!

நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாது நபி இந்தியா முழுவதும் இன்று இஸ்லாமிய மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் 29-வது நாளை கர்நாடக மாநிலம் டிப்டூர் பகுதியில் துவங்கி பரகாநகாலு கேட் பகுதியில் நிறைவு செய்கிறார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதல்!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 141-வது‌ நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூரு அணி வெற்றி!

நேற்று பெங்களூரு எப்.சி, நார்த் ஈஸ்ட் யுனைடைட் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

வானிலை நிலவரம்!

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

பிரின்ஸ் டீசர் வெளியீடு!

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

மிலாது நபியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவசேனா சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

மகளிர் ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *