டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

திமுக உட்கட்சி தேர்தல் நிறைவுகட்டமாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி 27-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை கர்நாடக மாநிலம் நாகமங்கலா பகுதியில் தொடங்கி, அடிசுன்சநகரி பகுதியில் நிறைவு செய்கிறார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி!

9-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இன்று கேரள மாநிலம் கொச்சியில் துவங்குகிறது.

வானிலை நிலவரம்!

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முத்துவேல் கருணாநிதி நூல் வெளியீட்டு விழா!

திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

சென்னையில் மின் தடை!

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, சென்னை தி.நகர் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 139-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மிரள் டீசர் வெளியீடு!

சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன் நடித்த மிரள் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி!

நேற்று நடைபெற்ற இந்திய‌ அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 404 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 5,072 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீபாவளி ஷாப்பிங்… தி.நகருக்கு போகிறீர்களா? இதை கவனிங்க!

மாடு முட்டி சேதமான மோடி ரயில் !

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.