குளிர்காலக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 7) முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நடமாடும் காய்கறி அங்காடி!
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்!
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கூரை வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் இன்று முதல் சேகரிக்கப்பட உள்ளது.
பாஜக ஆர்ப்பாட்டம்!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் ரயில் பயணம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூரில் இருந்து ரயில் மூலம் தென்காசி செல்கிறார்.
வானிலை நிலவரம்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்ததால், தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜல்லிக்கட்டு வழக்கு!
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
பாரதியார் நாடகம்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாரதியார் யார் என்ற வரலாற்று நாடகம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா, வங்கதேசம் மோதல்!
இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 200-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.