ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 29) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மானிய கோரிக்கை விவாதம்!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காலையில் நீர்வளம், தொழிலாளர் நலன் மற்றும் மாலையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் போராட்டம்!
இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ’ஜெய் பாரத்’ போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
விசிக ஆர்ப்பாட்டம்!
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!
பிளஸ் 1 தேர்வு குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி ஆலோசனை!
குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 312வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் !
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.
லியோ ஷூட்டிங்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.
கிச்சன் கீர்த்தனா: பஞ்சாபி சிக்கன் கறி!