மத்திய அமைச்சர் ஆலோசனை!
கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து இன்று (ஏப்ரல் 7) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
புனித வெள்ளி!
உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான புனித வெள்ளி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார தினம்!
உலகம் முழுவதும் இன்று “உலக சுகாதார தினம்” ‘health of all’ என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 321வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1947 ஆகஸ்ட் 16!
கவுதம் கார்த்தி நடித்துள்ள ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
யோசி ரிலீஸ்!
ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கத்தில் அபய் சங்கர், ரேவதி வெங்கட் நடித்துள்ள ‘யோசி’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
ஐபிஎல் 2023!
ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.