100வது மன் கீ பாத்!
பிரதமர் நரேந்திர மோடியின் ‛மனதின் குரல்‘ எனும் ‛மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் 100 வது எபிசோட் இன்று (ஏப்ரல் 30) நடைபெற உள்ளது. இதன் நினைவாக மத்திய அரசு சார்பில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
கோலாரில் பிரதமர் பிரச்சாரம்!
கர்நாடக தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, இன்று கோலாரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று, பின் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
JEE அட்வான்ஸ்ட் தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அம்மனுக்கு பட்டாபிஷேகம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 8ம் நாளான இன்று அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
வைகை அணையில் தண்ணீர் திறப்பு!
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 343வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கில் களமிறங்கும் சென்னை!
ஐபிஎல் லீக் தொடரில் இன்று சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளும், வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதுகின்றன.
வரலாற்றில் முதன்முறை: உச்சநீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி! நடந்தது என்ன?
“மதுபானத்தை புரோமோஷன் செய்ய ஏடிஎம் இயந்திரமா?”: கொந்தளித்த அன்புமணி