பொதுத் தேர்வு முடிவுகள்!
10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகிறது.
முதல்வர் ஆலோசனை!
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஊட்டி மலர் கண்காட்சி!
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125 வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி 7 உச்சி மாநாடு!
ஜி 7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று தொடங்குகிறது
பாஜக செயற்குழு கூட்டம்!
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு!
உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த கே.வி விஸ்வநாதன் இன்று பதவி ஏற்கிறார்.
சிபிசிஐடி விசாரணை!
கள்ளச்சாராய மரண வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்குகின்றனர்.
விஜய் சேதுபதி பட ரிலீஸ்!
விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் இன்று வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 363ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை அப்டேட்!
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிளாசன் அபார சதம்: பெங்களூரு அணிக்கு 187 ரன்கள் இலக்கு!
கிச்சன் கீர்த்தனா: கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்!