ராகுல் காந்தி பிரச்சாரம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்குகிறது. இதற்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 4)தொடங்கி பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
சிகாகோவில் ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக சான் பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளார்.
தமிழகத்தில் மழை!
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புருனேவில் மோடி பேச்சு!
மூன்று நாள் அரசு முறை பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, புருனே சுல்தான் ஹஸனல் போல்கியா மற்றும் இதர அரச குடும்ப உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார். அப்போது, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
மீனவர்களுக்கு அபராதம்!
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி, தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 பதக்கங்களை வென்ற இந்தியா!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஆந்திரா தெலங்கானாவுக்கு ஆரஞ்சு அலர்ட்
கனமழை காரணமாக ஆந்திரா, தெலங்கானாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், கனமழை தொடரும் என்று ஹைதராபாத் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 171ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகியது.
கோவை – தன்பாத் சிறப்பு ரயில்!
இன்று முதல் 2025 ஜனவரி 1ஆம் தேதி வரை, புதன்கிழமைகளில் தன்பாத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் தன்பாத் – கோவை சிறப்பு ரயில் நாளை நண்பகல் 12.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ள்து.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பாஸ்மதி ரைஸ் சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?
‘தி கோட்’ – மோகன் ரீ இன்னிங்ஸ் ஆக அமையுமா ?
சம்பளத்த காணோம் ’ஜி’ : அப்டேட் குமாரு
மக்களவை தேர்தல்… சென்னையில் நடுத்தர மக்கள் அதிகளவில் ஆதரவு: உதயநிதி பேச்சு!