டாடாவின் ராணுவ விமான உற்பத்தி ஆலை!
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை இன்று (அக்டோபர் 28)பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது.
திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்!
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற உள்ளது.
சிறப்பு ரயில்கள்!
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருநெல்வேலி ஏசி சிறப்பு ரயில் (06073) சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி வழியே சேலத்திற்கு இரவு 7.47 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி வழியே திருநெல்வேலிக்கு அடுத்தநாள் காலை சென்றடையும்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கடும் போக்குவரத்து நெரிசல்!
விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தவெக மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாலை நிகழ்ச்சி முடிந்து அக்கட்சித் தலைவர் விஜய் கிளம்பியதும், ஒரே சமயத்தில் தொண்டர்களும் பொதுமக்களும் கிளம்பியதால் சென்னை திருச்சி நெடுஞ்சாலையிலும், விழுப்புரம் திண்டிவனம் செல்லும் வழித்தடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 11 மணி நிலவரப்படி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதை காண முடிந்தது.
வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரச்சாரம்!
வரும் 13ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்றும் நாளையும் வயநாட்டில் தனக்காக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
மழை அப்டேட்!
தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 225வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும் டீசல் ரூ. 92.34க்கும் விற்பனையாகிறது.
கூட்டணி ஆட்சி!
தவெக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகைகள் பிறந்தநாள்!
நடிகைகள் அதிதி ராவ், வாணி போஜன் ஆகியோர் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மகிழம்பூ முறுக்கு!
விஜய் மாநாடு: உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை… குவியும் வாழ்த்து!
திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
“ஆட்சி அதிகாரத்தில் பங்கு”… விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு!