அரசு விடுமுறை
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொதுமக்கள், மாணவ மாணவிகளின் வசதிக்காக இன்று தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பணப் பரிமாற்ற விதிகள்
ரிசர்வ் வங்கியின் உள்நாட்டுப் பணப் பரிமாற்ற விதிகள்(Domestic Money Transfer Rules) இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம்!
60 நாட்களாகக் குறைக்கப்பட்ட ரயில் பயணங்களுக்கான முன்பதிவு கால அவகாசம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2 மாவட்டங்களில் மிக கனமழை
இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் இன்று 229-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா-நியூசிலாந்து கடைசி டெஸ்ட்
இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
கிஷ்கிந்தா காண்டம்
மலையாள படமான கிஷ்கிந்தா காண்டம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
வீகன் டே
உலகம் முழுவதும் நவம்பர் 1 ஆம் தேதி ‘வீகன்’(Vegan) நாளாகக் கொண்டாடப் படுகிறது. வீகன் உணவு முறை என்பது தாவரங்கள் சார்ந்த உணவு முறை. இதில் விலங்குகளிலிருந்து கிடைக்கும் எந்த வகையான பொருட்களும் பயன்படுத்தப்படமாட்டாது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!i
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக இன்று(நவம்பர் 1) கோயம்பேடு சந்தை இயங்காது என்று கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம்
சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் இன்று மாலை 5 மணிக்குத் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?
இளையராஜாவின் சிம்பொனி இசை ரிலீஸ் ஆகிறது!