டாப் 10 செய்திகள் : மோடி இத்தாலி பயணம் முதல் நீட் தேர்வு குளறுபடி விசாரணை வரை!

அரசியல்

இத்தாலி செல்லும் பிரதமர் மோடி!

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (ஜூன் 13) இத்தாலி செல்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

ராமதாஸ் ஆலோசனை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவது தொடர்பாக  தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில்  இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு!

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் ஆகியோர் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட சூமோடோ வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு!

நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சிவகாசி பட்டாசு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை!

நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை தலைமை அதிகாரி குமார் சிவகாசிக்கு வந்து தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க கட்டடத்தில், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிா்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஜிவி பிரகாஷ் பிறந்தநாள்!

தமிழ் திரைப்பட உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பதவி ஏற்பு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக 46 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக பெம்மா காண்டு இன்று பதவி ஏற்கிறார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு பதிவெண் மற்றும் உரிய அனுமதிச்சீட்டு இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

டி20 உலகக்கோப்பை!

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

பெட்ரோல் டீசல் விலை! 

சென்னையில் 89வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை அப்டேட்!
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் ஜூன் 18ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

.செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: டாட்டூவை அழிக்க நினைப்பவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா: பிரெட் வெஜ் ஆம்லெட்!

பதவியேற்பு விழாவா? தெலுங்கு சினிமாவா? அப்டேட் குமாரு

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை மையம் கூல் அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *