Top 10 News in Tamil July 26 2024

டாப் 10 செய்திகள் : நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் முதல் ராயன் ரிலீஸ் வரை!

அரசியல்

சிறப்பு பேருந்துகள்!

வார இறுதி நாட்களை முன்னிட்டு திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (ஜூலை 26) 260 பேருந்துகளும், நாளை 290 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

கார்கில் செல்லும் மோடி

1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் செல்லும் பிரதமர் மோடி வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட வுள்ளார்.

நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்!

2018 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார்

மழை அப்டேட்!

மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டி தொடக்கம்!

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்குகிறது. 33வது ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தூய பனிமய மாதா பேராலயத்தில் கொடியேற்றம்!

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத்தில் 442 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

விவசாயிகளில் குறைத்தீர் கூட்டம்!

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

ராயன் ரிலீஸ்!

நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவரது 50ஆவது திரைப்படமான ராயன் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

புதிய அணை கட்டும் திட்டமில்லை!

முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிர்வாகத் துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி பதிலளித்தார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 131வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய வெந்தய ரைத்தா!

டிஜிட்டல் திண்ணை: காங்கிரசுக்கு ஸ்டாலின் வைத்த செக்!

மாசம் ஒரு வாட்ஸப் குரூப் – அப்டேட் குமாரு

கனிம வளங்களுக்கு வரி: மாநில அரசுகளுக்கே அதிகாரம்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *