வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் இன்று (ஆகஸ்ட் 29) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் சந்திப்பு!
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
பெண் மருத்துவர் கொலை – குடியரசுத் தலைவர் கண்டனம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்தநிலை ஏற்பட எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது என கூறியுள்ளார்.
வேளாங்கண்ணி பெருவிழா!
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் இவ்விழாவை தொடங்கி வைக்கிறார்.
தேசிய விளையாட்டு தினம்!
தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய ஹாக்கி ஜாம்பவனான மேஜர் தயான் சந்த் பிறந்தநாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 165-வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும். டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பார்முலா-4 கார் – வழக்கு விசாரணை!
பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
எங்கெங்கு மழை?
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அசல் மதிப்பெண்!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிரபலங்கள் பிறந்தநாள்!
நடிகர்கள் விஜயக்குமார், விஷால், நாகர்ஜுனா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ட்ரை ஃப்ரூட் – பைனாப்பிள் ரோல்!
ஆகஸ்ட் 31-ல் ரேஷன் கடைகள் இயங்குமா? வெளியான முக்கிய அப்டேட்!
நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!
‘வாழை’… வீடு தேடிச்சென்ற திருமா… விமர்சிக்கும் கிருஷ்ணசாமி