top 10 news in tamil

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

விசிக ஆர்ப்பாட்டம்!

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ரம்ஜான் பண்டிகை!

நேற்று வானில் பிறை தென்பட்டதை அடுத்து இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட்!

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

குருப்பெயர்ச்சி விழா!

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி பெருவிழா நடைபெற உள்ளது.

உலக பூமி நாள்!

பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக உலகம் முழுவதும் இன்று ’உலக பூமி நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 336வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆதிபுருஷ்’ அப்டேட்!

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ’ஆதிபுருஷ்’ படத்தின் புதிய அறிவிப்பை இன்று காலை 8.01 மணிக்குப் படக்குழு வெளியிட உள்ளது.

’டிடி ரிட்டன்ஸ்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடலான “பிரஞ்ச் குத்து” இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

ஐபிஎல் 2023

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 30வது லீக் போட்டியில் லக்னோ – குஜராத் மற்றும் 31வது லீக் போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி

விசில் போட வைத்த CSK: நேரடியாக கண்டு களித்த முதலமைச்சர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *