டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஆர்.எஸ்.எஸ். பேரணி

தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று (ஏப்ரல் 16) ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்

சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மதியம் நடைபெற உள்ளது.

கோலாரில் மீண்டும் ராகுல்காந்தி

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று பெங்களூரு வரும் ராகுல்காந்தி, கோலாரில் நடைபெறும் ’ஜெய் பாரத்’ பேரணியில் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ முன் ஆஜர்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சி.பி.ஐ., முன் இன்று ஆஜராக உள்ளார்.

பிரயாக்ராஜில் 144 தடை உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று 330வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐபிஎல்: இன்றைய போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் சந்திக்கின்றன.

ரஷ்யா-டென்மார்க் மோதல்

மொனாக்கோவில் நடந்து வரும் மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியில் இன்று ரஷ்ய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், டென்மார்க் வீரர் ருனேவுடன் மோதுகிறார்.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

திருப்பதி திவ்ய தரிசனம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *