அமலாக்கத்துறை சம்மன்!
சட்டவிரோத நிலக்கரி சுரங்க வழக்கில் இன்று (நவம்பர் 3) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
6 மாநில இடைத்தேர்தல்!
மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக சுற்றுலா ரயில்!
மதுரை கூடல் நகரிலிருந்து, அமிர்தசரஸிற்கு ஆன்மீக சுற்றுலா ரயில் இன்று இயக்கப்படுகிறது.
கருத்துக் கேட்பு கூட்டம்!
இந்து மக்கள் கட்சி நடத்தவுள்ள சனாதனம் காப்போம் மாநில மாநாடு கருத்து கேட்பு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது.
உலக கோப்பை போட்டி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
தென்னிந்திய நாடக விழா!
தென்னிந்திய நாடக விழா சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று முதல் நவம்பர் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 166-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அனல் மேலே பனித்துளி டிரைலர்!
கைசர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 1,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு நாள் மழையில் இற்றுப்போன தமிழகம்: எடப்பாடி