டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

கிராம சபை கூட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி!

இன்று புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் வி.சி.க தலைமையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

காந்தி ஜெயந்தி விழா!

மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் நடைபயணம்!

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காந்தி பிறந்தநாளையொட்டி, இன்று முதல் 18 மாதங்கள் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் 3500 கி.மீ நடைபயணம் செய்ய உள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 134-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் விடுமுறை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம்!

ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காமராஜர் நினைவு தினம்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 47-வது நினைவு தினம் இன்று தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் வசூல் வேட்டை!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதல்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

எல்லாம் அவர் கையிலதான் இருக்கு: பிராட் ஹாக்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *