கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) காலை அறிமுகம் செய்கிறார். அப்போது கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிடுகிறார்.
உக்ரைனுக்கு செல்லும் மோடி
ரஷ்யா போருக்கு நடுவே பிரதமர் மோடி இன்று போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு செல்ல உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு!
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னை தினம்!
தலைநகர் சென்னை உருவான தினத்தை கொண்டாடும் வகையில் இன்று 385வது சென்னை தினம் (Madras Day) கொண்டாடப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாகிறது!
தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து!
அரக்கோணம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரசுப்பள்ளியில் இன்று முதல் கலைத்திருவிழா!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கம்பம் சுருளிவேலப்பர் கோவில் கும்பாபிஷேகம்!
கம்பம் சுருளிவேலப்பர் (எ) சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறவுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
லட்சத்தீவை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 158வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உடற்பயிற்சி… இந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க மறந்து விடாதீர்கள்!
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் முளைப்பயறு சாலட்