2ஆம் கட்ட கல்வி விருது விழா!
இரண்டாம் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ’கல்வி விருது வழங்கும் விழா’ சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூலை 3) நடைபெறுகிறது.
மொபைல் ரீசார்ஜ் புதிய கட்டணங்கள் அமல்!
ஏர்டெல், ஜியோ மற்றும் VI நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு விசாரணை!
நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.
ஆசிய முதலீட்டு வங்கி ஆய்வு!
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்கவுள்ள ஆசிய முதலீட்டு வங்கி இன்று ஆய்வு செய்யவுள்ளது.
ரோப் கார் சேவை நிறுத்தம்!
அரக்கோணம் சோளிங்கர் மலைக் கோயிலில் இன்றும் நாளையும் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சதுரகிரி செல்ல அனுமதி!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களில் சேர இன்று முதல் ஜூலை 5-ம் தேதி வரை https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இன்றே கடைசி நாள்!
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விரும்புவோர் jionindiancoastguard.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வருகை!
உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று தனி விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.
ஓடிடியில் கருடன் ரிலீஸ்!
‘கருடன்’ திரைப்படம் அமேசான் பிரைம் உள்ளிட்ட 3 ஓடிடி தளங்களில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பேரீச்சம்பழம் கேரட் சாலட்
பயிர் காப்பீடு… விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே முக்கிய கோரிக்கை!