காந்தி ஜெயந்தி : சர்வதேச அகிம்சை தினம்!
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அமைதிக்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இன்று சர்வதேச அகிம்சை தினம் கடைபிடிக்கப் படுகிறது.
மது ஒழிப்பு மாநாடு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் தலைமையில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.
கிராமசபை கூட்டம்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
டாஸ்மாக் மூடல்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா விவசாயிகள் போராட்டம்!
பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி இன்று டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் பாத யாத்திரை!
காந்தி பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் 77 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாத யாத்திரை நடைபெறுகிறது.
ஈஷா மையத்தில் 2வது நாளாக விசாரணை!
ஈஷா யோக மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து கோவை ஈஷா மையத்தில் போலீஸாரும் சமூகநலத் துறை அதிகாரிகளும் இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
ஞாயிறு அட்டவணைபடி ரயில் இயக்கம்!
காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு மார்க்கங்களில் இன்று புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வேட்டையன் டிரைலர் ரிலீஸ்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் காட்சிகள் இன்று படக்குழு சார்பில் வெளியிடப்படுகிறது.
7 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துரைமுருகன் திடீர் துபாய் பயணம்… ஏன்?
தீபாவளி கிஃப்ட் ரெடி… அப்டேட் குமாரு