தவெக மாநாடு விஜய் அறிவிப்பு!
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று (செப்டம்பர் 8) காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைப்பு!
சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பேசிய மகாவிஷ்ணு சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் விசாரணை!
மணிப்பூர் மாநிலம் மொராங்கில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் குறித்து மத்திய உளவுத்துறை இன்று விசாரணையை தொடரவுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்!
’வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 13ம் தேதி வரை மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துணை கலந்தாய்வு நிறைவு!
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபெற்று வந்த துணை கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.
வேளாங்கண்ணி திருவிழா!
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த தினமான இன்று பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
முருகன் கோயில் குடமுழுக்கு!
சின்னமனூா் அருகே தென்பழனியில் அமைந்துள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
சுப்மன் கில் பிறந்தநாள்!
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் பிறந்தநாள் இன்று.
சில்லுனு ஒரு காதல்!
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 175வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும். டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பூப்போன்ற இட்லி செய்யலாம் வாங்க!