தவெக அரசியல் பயிலரங்கம்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழக தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று (அக்டோபர் 18) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
ஈஷா – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
கோவையில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
6 மாவட்டங்களில் கனமழை!
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதையொட்டி இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி – அமைச்சர் ஆலோசனை!
தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இன்று அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
14வது நாளாக மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் 14வது நாளை எட்டியுள்ளது.
இன்றே கடைசி நாள்!
முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இயற்கை உணவு கண்காட்சி!
‘துலா’ அமைப்பின், 10வது இயற்கை உணவு கண்காட்சி சென்னையில் இன்று துவங்குகிறது.
அமரன் இசை வெளியீட்டு விழா!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை நடைபெறுகிறது .
ப்ளடி பெக்கர் பட டிரைலர் ரிலீஸ்!
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள `ப்ளடி பெக்கர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் தொடர்ந்து 215-வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கவுனி அரிசி அல்வா
டிஜிட்டல் திண்ணை: எனக்கே கூட இல்லாமல் போகலாம்- பொன்முடி பேச்சின் பின்னணி இதுதான்!