திருவள்ளுவர் திருநாள்!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (மே 24) திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது.
மழை அப்டேட்!
ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஐ. பி.எல் குவாலிஃபயர்!
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயர் 2’ ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
பஞ்சாப் ஹிமாச்சலில் மோடி பிரச்சாரம்!
பஞ்சாபில் இரண்டாவது நாளாக இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேசம் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தேசிய சகோதரர்கள் தினம்!
சகோதரர்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும், சிறப்பாக்கவும், ஆண்டுதோறும் மே 24ஆம் தேதி தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
தியேட்டர் ரிலீஸ்!
பகலறியான், கொஞ்சம் பேசினால் என்ன, பிடி சார் உள்ளிட்ட படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகின்றன.
கல்லூரிகளில் சேர கடைசித் தேதி
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 69ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்!
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 535 பேருந்துகளும் நாளை 595 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் குளிக்க அனுமதி!
குற்றாலத்தில் பிரதான அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (மே 24) பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…