சென்னை சங்கமம் தொடங்குகிறது!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்த 4 நாட்கள் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மோடி திறக்கும் இசட் சுரங்கப்பாதை
காஷ்மீர் மாநிலம் சந்தர் பால் பகுதியில் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில் ரூ.2700 கோடி செலவில் 6.5 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 13) திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு – கடைசிநாள்!
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பினை வாங்க இன்றையை தினமே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!
திருவாடானை தாலுகாவில் சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை ஆகிய 4 இடங்களில் இன்று முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது.
சைனிக் பள்ளியில் சேர இன்றே கடைசி நாள்!
மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை!
பிரசித்தி பெற்ற கோவில்களின் திருவிழாக்களை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா ஆரம்பம்!
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கி 45 நாட்கள் நடக்கிறது.
மோட்டோ புதிய மொபைல் அறிமுகம்!
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டில் தனது முதல் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் ஃபோனான மோட்டோ ஜி-5 மொபைலை இன்று அறிமுகப்படுத்த உள்ளது.
வைபவ் பட டைட்டில் ரிலீஸ்!
வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை, அதனை தயாரிக்கும் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இன்று வெளியிடுகிறது.
மிதமான மழை பெய்யும்!
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது..
வழித்துணையே பாடல் ரிலீஸ்!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் அடுத்த பாடலான ’வழித்துணையே‘ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ரகடா பாட்டீஸ்
அயலகத் தமிழர் தினம்… இத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமா?
அருள்தாஸ் பற்றி அந்த விஷயம் தெரியுமா? – இன்ட்ரஸ்டிங் தகவல்கள்!