பெண் மருத்துவா் கொலை: உச்சநீதிமன்றம் விசாரணை!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் வேட்புமனு தாக்கல்!
ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
கவிதா ஜாமின் மனு விசாரணை!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கி்ல் தெலுங்கானா பி.ஆர்.எஸ்.கட்சியின் கவிதா ஜாமின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தொட்டாபெட்டா செல்ல தடை!
தொட்டாபெட்டா செல்லும் சாலையில் Tollgate, Fasttag அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி பிறந்தநாள் – செல்வப்பெருந்தகை அழைப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து ஊர்வலம் செல்லுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
13 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் மதுக்கடைகள் அடைப்பு!
ஒண்டிவீரன் நினைவுதினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை தாலுகா திருச்செந்தூர் ரோட்டில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் அருகே உள்ள 10836, 10641, 10736, 10618, 10732 ஆகிய அரசு மதுபான கடைகளை இன்று ஒருநாள் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி!
தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
திருச்சியில் உடற்தகுதி தேர்வு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற கூடுதல் தேர்வாளர்களுக்கு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்
அடுக்கடுக்கான பிரச்சனைகள்… ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!