இரண்டாவது நாள் கள ஆய்வில்…
விருதுநகரில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி ராஜா நகரில் ரூ.77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை இன்று (நவம்பர் 10) திறந்து வைக்கிறார்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு!
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 81) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார்.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்த நாமக்கல் புதிய பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் இன்று நடைபெறுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல் 15ம் தேதி வரை கனமழை கொட்ட துவங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
வைகை அணையில் தண்ணீர் திறப்பு!
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் 2 பேட்ச்களாக இன்றும் நாளையும் மெல்போர்ன் செல்கின்றனர்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா 2வது போட்டி!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மோதும் இரண்டாவது ‘டி-20’ போட்டி இன்று இரவு 8 மணிக்கு கெபேஹாவில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதல்!
தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கீரை கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்!