பள்ளிகள் திறப்பு!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய வகுப்பில் அடி எடுத்து வைக்கும் மாணவர்களை வரவேற்க அந்தந்த பள்ளிகள் சிறப்பு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முதல் அமைச்சரவை கூட்டம்!
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3ஆவது முறையாக மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அவரைத் தொடர்ந்து 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு!
அரசு கலை, அறிவியல் கல்லூரி பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் இன்று (ஜூன் 10) முதல் அழைக்கப்படுகிறார்கள்.
வானிலை அப்டேட்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..அதேசமயம் அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் இன்று முதல் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
டி20 உலகக்கோப்பை!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, வங்காளதேசத்தை (டி பிரிவு) எதிர்கொள்கிறது.
சுந்தர் பிச்சை பிறந்தநாள்!
உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சை இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 86 வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோடிக்கு விஜய் வாழ்த்து!
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்
தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் இன்று முதல் 21 நாட்களுக்கு நடைபெறுகின்றன. விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: தொடர் தும்மல்… நிறுத்துவது எப்படி?
பியூட்டி டிப்ஸ்: இளவயதில் கருவளையங்கள்… எளிமையான தீர்வு உண்டா?