டாப் 10 நியூஸ் : ஆசிரியர்கள் போராட்டம் முதல் ஜெயம் ரவி பிறந்தநாள் வரை!

அரசியல்

ஆசிரியர்கள் போராட்டம்!
டிட்டோஜாக் அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய அளவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று (செப்டம்பர் 10) போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

எஸ்சிஏ பொறியியல் கலந்தாய்வு!
எஸ்சிஏ(அருந்ததியர்) பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பொறியியல் கலந்தாய்வு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

கமலா – டிரம்ப் நேரடி விவாதம்!
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை ஒட்டி இன்று இரவு 9 மணியளவில் பிலடெல்பியாவில் உள்ள தேசிய அரசியலமைப்பு மையத்தில் கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது.

இன்று பணிக்கு திரும்ப வேண்டும்!
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை கொலை சம்பவத்தை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாவிஷ்ணு விசாரணை அறிக்கை!
கைதாகியுள்ள மகாவிஷ்ணுவின் ஆன்மீக சொற்பொழிவு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நடத்தி வரும் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் ரயில் முன்பதிவு!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

கீழடி விடுமுறை!
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி 2 நாட்களுக்கு அருங்காட்சியகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் கவுன்சிலிங்!
ஆயுஷ் சேர்க்கைக்கான மத்திய கவுன்சிலிங் கமிட்டி (AACCC) அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு (AIAPGET) 2024 கவுன்சிலிங்கிற்கான பதிவு இன்று தொடங்குகிறது.

ஜெயம் ரவி பிறந்தநாள்!

நேற்று விவாகரத்து செய்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்

டிஜிட்டல் திண்ணை: மகாவிஷ்ணுவை பேசச் சொன்னது யார்? சிக்கிய கல்வி அதிகாரி வாக்குமூலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *