பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு!
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ விவகாரத்தை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி இன்று (அக்டோபர் 24) பங்கேற்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.
செபி தலைவர் மாதபி புச் ஆஜராகிறார்!
காங்கிரஸ் எம்.பி.யும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளருமான கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பு செபி தலைவர் மாதபி புச் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
கரையை கடக்கிறது டாணா புயல்!
வங்கக் கடலில் வலுபெற்றுள்ள டாணா புயல் இன்று நள்ளிரவில் ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கும் எனவும், 120 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானங்கள், ரயில்கள் ரத்து!
டாணா புயல் எச்சரிக்கை எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையம், இன்று இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாகவும், கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை!
டாணா புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
பூமியை கடக்கும் 6 விண் பாறைகள்!
பூமியை இன்று 6 விண் பாறைகள் கடந்து செல்வதாக கண்டறிந்துள்ள நாசா, இந்த பாறைகளால் ஆபத்து எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது.
சிவகங்கையில் 144 தடை உத்தரவு!
மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி சுவாமி தரிசனம்!
திருப்பதி திருமலையில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் இன்று காலை 10 மணிக்கும், அங்கபிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் காலை 11 மணிக்கும் துவங்குகிறது.
டிசிஎஸ் இண்டர்வியூ!
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் சார்பில் வெப்மெத்தட்ஸ் சப்போர்ட் (WebMethods Support) பணிக்கு இன்று இண்டர்வியூ நடைபெறுகிறது.
இந்தியா – நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி!
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!
அவ்ளோதான் முடிச்சிவிட்டீங்க போங்க… அப்டேட் குமாரு