அரியலூர், பெரம்பலூரில் ஸ்டாலின் கள ஆய்வு!
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 15) கள ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு!
மொத்தம் 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
சபரிமலை நடை திறப்பு!
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
துலா உற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்வான கடைமுகத் தீர்த்தவாரி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாவட்டங்களில் கனமழை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ராமநாதபுரம், கடலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்!
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மோசமாகும் காற்று தரம்!
டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், இன்று காலை 8 மணி முதல் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP 3) செயல்படுத்தப்படும் என காற்றின் தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
அதர்வா படத்தின் ஸ்னீக் பீக் ரிலீஸ்!
நடிகர் அதர்வா நடித்த ’நிறங்கள் மூன்று’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தொடரை வெல்லுமா இந்தியா?
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 8.30 மணிக்கு ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள தி வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் கடைசி மற்றும் 4வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால், இன்று வெல்லும் பட்சத்தில் இந்தியா தொடரை கைப்பற்றும்.
தேசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி!
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் 76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் இன்று தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…