கோவை செல்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வின் முதல்கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 5) கோவை செல்கிறார். அப்போது அவர், விளாங்குறிச்சியில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.
விழுப்புரம் செல்கிறார் உதயநிதி
விழுப்புரம் மாவட்டத்துக்கு நவம்பர் 5-ஆம் தேதி வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கட்சி சார்பில் திண்டிவனம், விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் அமைச்சர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்!
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் அந்நாட்டின் நேரப்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!
சர்வதேச சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் வேளாங்கண்ணியிலும், புதுச்சேரியில் வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்திலும் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது.
HDFC யுபிஐ சேவை நிறுத்தம்!
HDFC பேங்க், அத்தியாவசிய சிஸ்டம் பராமரிப்புக்காக அதன் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) சேவைகள் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
ரயில்கள் சேவை ரத்து!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை வழியாக செல்லும் ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரிலியா புதிய பைக் அறிமுகம்!
ஏப்ரிலியா நிறுவனமானது புதிய ‘டுவோவோ 457’ (Tuono 457) என்ற புதிய பைக்கை இன்று EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி!
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை நடைபெகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 233வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா கட்லெட்
அதிவிரைவு அமைச்சர் சிவசங்கர்… திண்டாட்டமில்லா தீபாவளி பயணம்!